செங்கல்பட்டு மக்களே.. இலவச தையல் இயந்திரம் பெற…

0
2

செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு தமிழக அரசின் “சத்தியவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திர திட்டம்” பயனுள்ளதாக இருந்து வருகிறது. பெண்கள் சுயதொழில் தொடங்கி வருமானம் ஈட்டும் வகையில் இந்த திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரிய தேவையில்லை. வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

  1. முதலில் தமிழ்நாடு இ-சேவை இணையதளம் www.tnesevai.tn.gov.in சென்று புதிய பயனர் கணக்கு (User ID) உருவாக்க வேண்டும்.
  2. அதன் பிறகு உள்நுழைந்து “Social Welfare” என்ற பிரிவை தேர்வு செய்ய வேண்டும்.
  3. அங்கு “Sathiyavani Muthu Ammaiyar Scheme” என்பதை தேர்வு செய்து விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்.
  4. விண்ணப்பிக்கும் போது வருமானச் சான்று, ஆதார், முகவரி சான்று உள்ளிட்ட தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  5. விண்ணப்பம் சமர்ப்பித்த பிறகு அதன் நிலையை ஆன்லைனிலேயே சரிபார்க்கும் வசதியும் உள்ளது.

இந்த திட்டம் மூலம் பல பெண்கள் தையல் தொழில் தொடங்கி சுயதொழில் வாய்ப்பைப் பெற்று வருகின்றனர். தகுதியுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுமாறு சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.