Home செங்கல்பட்டு ஸ்டாலின் சார் யாருனு தெரியுமா?”: தவெக-வுக்கு ஆ.ராசா எம்பி அனல் பறக்கும் கேள்வி!

ஸ்டாலின் சார் யாருனு தெரியுமா?”: தவெக-வுக்கு ஆ.ராசா எம்பி அனல் பறக்கும் கேள்வி!

0

நீங்கள் மேடைகளில் அடிக்கடி கேட்கும் ‘ஸ்டாலின் சார்’ யார் தெரியுமா? அரசியல் சாசன சட்டமே திருத்தப்பட்டாலும், ஏழை முன்னேறிய வகுப்பினருக்கான EWS இடஒதுக்கீட்டைத் தமிழ்நாட்டிற்குள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டேன் என்று நெஞ்சுரத்தோடு சொன்னவர்தான் ஸ்டாலின் சார்” என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா அவர்கள் தவெக அரசுக்கு அனல் பறக்கும் பதிலடி கொடுத்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், புதிய தவெக அரசின் செயல்பாடுகள் மற்றும் மாநில உரிமைகளில் அதன் மெத்தனப் போக்கு குறித்து ஆ.ராசா எம்பி கடுமையான விமரிசனங்களை முன்வைத்துப் பேசினார்.

அப்போது தவெக மேடைகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்துக் கூறப்படும் கருத்துகளுக்குப் பதிலளித்த அவர், “அரசியலமைப்புச் சட்டத்தை மீறினால் ஒரு மாநிலத்தின் ஆட்சியையே கலைக்கலாம் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், எங்களுடைய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதி உரிமையைக் காப்பதற்காக, அந்தச் சட்டத்தையே மீறி ஆட்சியைக் கலைத்தாலும் பரவாயில்லை என்ற துணிச்சலோடு நின்றவர் மு.க.ஸ்டாலின். நாங்கள் கொள்கைக்காக அப்படிப் போராடியிருக்கிறோம்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து தற்போதைய தவெக அரசின் நிலைப்பாடுகளைச் சாடிப் பேசிய ஆ.ராசா, “ஆனால், இன்றைக்குப் புதிய ஆட்சி அமைத்துள்ள நீங்கள், மத்திய அரசிடம் தமிழ்த்தாய் வாழ்த்திற்காகக் கெஞ்சிக் கொண்டிருக்கிறீர்களே, உங்களது வீரம் எங்கே போனது? இதையெல்லாம் நாங்கள் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தக் கூடாதா? மாநில உரிமைகளைத் தாராளமாக விட்டுக் கொடுத்துவிட்டு, ஆளுநரிடமும் பிரதமரிடமும் வெறும் 10 நிமிடங்கள் மட்டும் சந்தித்துவிட்டு வருபவர்கள், சமூக நீதிக்காகப் போராடிய ஸ்டாலின் சாரைப் பற்றிப் பேசுவது வேடிக்கையாக உள்ளது” என்று காரசாரமாகப் பேசி அரசியல் அரங்கில் புதிய விவாதப் புயலைக் கிளப்பியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version