Home Trending/Viral காரின் கதவில் சிக்கிய நல்ல பாம்பு – கடலூரில் பரபரப்பு!

காரின் கதவில் சிக்கிய நல்ல பாம்பு – கடலூரில் பரபரப்பு!

0

கடலூர் மாவட்டம் பாதிரிக்குப்பம் பகுதியில் காரின் கதவில் சிக்கிக்கொண்ட நல்ல பாம்பினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாதிரிக்குப்பத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பாக டிராக்டர் மற்றும் காரை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக காரின் உட்பகுதிக்குள் பாம்பு ஒன்று புகுந்ததை குடும்பத்தினர் கவனித்தனர். இதனால் அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்து அலறியடித்தபடி வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்தனர்.

பின்னர் பாம்பை வெளியேற்ற முயற்சிக்கும்போது, காரின் கதவை மூட முயன்றதில் அந்தப் பாம்பு கதவின் இடுக்கில் சிக்கிக் கொண்டது. பாம்பின் வால் பகுதி காரின் உள்ளேவும், தலை பகுதி வெளிப்புற விளக்கு அருகிலும் சிக்கிய நிலையில், அது வெளியேற முடியாமல் தவித்தது.

இதுகுறித்து தகவல் பெறப்பட்டதும், பாம்பு பிடி வீரர் செல்லா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அவர் மிகுந்த கவனத்துடன் காரின் இடுக்கில் சிக்கியிருந்த பாம்பை பத்திரமாக மீட்டார். பின்னர் அது சுமார் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பு என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, பிடிபட்ட பாம்பை அருகிலுள்ள காப்புக்காடு பகுதியில் கொண்டு சென்று பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

#Cuddalore #SnakeRescue #NallaPambu #ViralNews #TamilNews #BreakingNews #Wildlife #SnakeInCar #Trending #LocalNews

NO COMMENTS

Exit mobile version