செங்கல்பட்டு மாவட்ட இளைஞர்களுக்கு மகிழ்ச்சி தகவலாக, மத்திய அரசின் Coal India Limited நிறுவனத்தில் Management Trainee பணிக்கான 660 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பணியிடங்களுக்கு B.E / B.Tech, M.Sc, MCA, M.Tech உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வானவர்களுக்கு மாதம் ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் Coal India Recruitment Portal https://cdn.digialm.com மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி தேதி ஜூன் 11 என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிறுவனத்தில் உயர்ந்த சம்பளத்தில் வேலை பெற விரும்பும் இளைஞர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. வேலை தேடி வரும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இந்த தகவலை பகிர்ந்து பயன்பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.





