முதல்வர் விஜய்யின் சொத்து விவரம் குறித்து ஆனந்த் சீனிவாசன் அலசல்!

0
2

திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருந்து தற்போது தமிழக முதல்வராக அரியணை ஏறியுள்ள ஜோசப் விஜய்யின் நிதி மேலாண்மை மற்றும் அவரது முதலீடுகள் குறித்த விவாதங்கள் இணையத்தில் மீண்டும் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, அவரது சொகுசு கார்கள் முதலீடா அல்லது ஆடம்பரமா என்பது குறித்துப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சுவாரசியமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

தமிழகத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. நேற்று முதல்வராகப் பதவியேற்ற விஜய், இன்று சட்டமன்ற உறுப்பினராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில், தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அவர் குறிப்பிட்டிருந்த அவரது 600 கோடி ரூபாய் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளன.

விஜய்யின் பிரம்மாண்ட சொத்து மதிப்பு

விஜய் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தின்படி, அவரது நிதி நிலைமை வியக்கத்தக்க வகையில் உள்ளது:

அசையும் சொத்துக்கள்: சுமார் 404 கோடி ரூபாய்.

அசையாச் சொத்துக்கள்: சுமார் 220 கோடி ரூபாய்.

லிக்விட் கேஷ் (Liquid Cash): அவரது வங்கிக் கணக்குகளில் மட்டும் 313 கோடி ரூபாய் இருப்பு உள்ளது. இதில் ஒரே சேமிப்புக் கணக்கில் 213 கோடி ரூபாய் வைத்திருப்பது, அவரிடம் இருக்கும் மிகப்பெரிய பணப்புழக்கத்தைக் காட்டுகிறது.

லெக்ஸஸ் 350, பிஎம்டபிள்யூ 17, டொயோட்டா வெல்ஃபையர் உள்ளிட்ட சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான கார்களை அவர் வைத்துள்ளார்.

முதல்வர் விஜய்யின் இந்த முதலீட்டு முறை குறித்துப் பிரபல பொருளாதார வல்லுநரும், காங்கிரஸ் பிரமுகருமான ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில் சில முக்கியக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்த சொகுசு கார்களை ஒருபோதும் நிதி ரீதியான சொத்தாகக் கருத முடியாது. இவை காலப்போக்கில் மதிப்பைக் குறைக்குமே (Depreciation) தவிர லாபத்தைத் தராது. ஒருவேளை வருங்காலத்தில் ‘விஜய் பயன்படுத்திய கார்’ என்ற அடிப்படையில் ஒரு அரிய பொருளாக (Collectible) மாற வாய்ப்பு உள்ளது என்றார்.

வரி சேமிப்பிற்காகக் கார்களை வாங்கியிருப்பதாகச் சொல்வதில் உண்மையில்லை. வரி சேமிப்பு வேறு, முதலீடு வேறு. இவை முழுக்க முழுக்க ஒருவரது ‘லைப் ஸ்டைல்’ (Lifestyle) எனப்படும் வாழ்க்கை முறை சார்ந்த விருப்பத்திற்காக வாங்கப்படுபவை” என அவர் தெளிவுபடுத்தினார்.

ஒரு தனிநபராகத் தனது நிதியைச் மிகச் சிறப்பாக மேலாண்மை செய்துள்ள விஜய், அதே போன்றதொரு திறமையான நிதி மேலாண்மையைத் தமிழக அரசின் கஜானாவை நிர்வகிப்பதிலும் காட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. குறிப்பாக, கடனில் தத்தளிக்கும் தமிழகப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அவரது ‘பணப்புழக்க உத்தி’ (Liquid Cash Strategy) உதவுமா என்பது விவாதத்திற்குரியது.

“பணம் கையில் இருந்தால் தான் பலம்” என்ற கொள்கையை விஜய் தனது தனிப்பட்ட வாழ்வில் பின்பற்றுவது அவரது வங்கி இருப்பு மூலம் தெரிகிறது.