Home செங்கல்பட்டு சாலை விபத்துகளில் 8 பேர் உயிரிழப்பு – முதலமைச்சர் இரங்கல்

சாலை விபத்துகளில் 8 பேர் உயிரிழப்பு – முதலமைச்சர் இரங்கல்

0

செங்கல்பட்டு மாவட்டத்தில் அடுத்தடுத்து நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் சிலாவட்டம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.  அதேபோல், மதுராந்தகம் அருகே புக்கத்துறை கூட்டுச் சாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் மருத்துவர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துகளை அறிந்து மிகவும் வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சைகளை வழங்க உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version