Home செங்கல்பட்டு கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள் – 100% வாக்களிப்புக்காக செய்யப்பட்ட ஏற்பாடு!

கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள் – 100% வாக்களிப்புக்காக செய்யப்பட்ட ஏற்பாடு!

0

செங்கல்பட்டு மாவட்டத்தில் முழுமையான வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக, பொதுமக்களை ஈர்க்கும் வகையில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தின் 7 சட்டமன்றத் தொகுதிகளில் 100% வாக்களிப்பை உறுதி செய்யும் நோக்கில், இன்று (ஏப்ரல் 19) கோவளம் கடற்கரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் கலந்து கொண்டு, ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்வின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், ஜனநாயக கடமையான வாக்களிப்பின் அவசியத்தையும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று, வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற செய்தியை பரப்பினர். பொதுமக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தனர்.

#Chengalpattu #VoterAwareness #Election2026 #KovalamBeach #TamilNaduNews

NO COMMENTS

Exit mobile version