செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம் முற்றுகை – பொதுமக்களின் எச்சரிக்கையால் பரபரப்பு

“கோரிக்கைக்கு தீர்வு இல்லையெனில் வாக்கு இல்லை” என முடையூர் கிராம மக்கள் எச்சரித்ததால் அதிகாரிகள் அவசர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

0
3

“கோரிக்கைக்கு தீர்வு இல்லையெனில் வாக்கு இல்லை” என முடையூர் கிராம மக்கள் எச்சரித்ததால் அதிகாரிகள் அவசர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் அருகே உள்ள மம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட முடையூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் இரும்பு தொழிற்சாலையை அகற்ற கோரி, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சாலையிலிருந்து எழும் கடும் சத்தம் மற்றும் வெளியேறும் புகை காரணமாக மூச்சுத்திணறல், மயக்கம் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனைகள் அதிகரித்துள்ளதாக மக்கள் குற்றம்சாட்டினர்.

பள்ளி, நூலகம் போன்ற மக்கள் அதிகம் பயன்படும் இடங்களுக்கு அருகே தொழிற்சாலை இயங்குவதால் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டிய பொதுமக்கள், வரவிருக்கும் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிர்வாகத்திடம் எடுத்துச் செல்ல உறுதியளித்ததைத் தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.

#Chengalpattu #Protest #ElectionBoycott #BreakingNewsTamil #IndustrialPollution