10ம் வகுப்பு தேர்வு முடிவு: செங்கல்பட்டு 92.15% தேர்ச்சி

0
2

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் வெளியிட்டார். இதில் செங்கல்பட்டு மாவட்டம் 92.15 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 31வது இடத்தை பெற்றுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 364 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளனர். இதில் 114 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 29,941 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 27,590 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவர்கள் 13,372 பேரும், மாணவிகள் 14,218 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதத்தில் முன்னிலை வகித்துள்ளனர்.

அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 146 அரசு பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றில் 25 அரசு பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு பள்ளிகளில் மட்டும் மொத்தம் 12,941 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 11,308 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 5,087 பேரும், மாணவிகள் 6,221 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டுகளை விட உயர்ந்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.