தமிழக அரசியல் களம் ஒருபுறம் தவெக தலைவர் விஜய்யைச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்க, மறுபுறம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவாதங்களும் சமூக வலைதளங்களில் அனல் பறக்கின்றன. இந்தச் சூழலில், நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு, எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போலப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் “IYKYK” (If You Know, You Know) என்கிற வாசகத்தைப் பகிர்ந்துள்ளார். விஷயம் தெரிந்தவர்களுக்கு மட்டும் இது புரியும்” என்பதே இதன் அர்த்தம். பலர் பேசிக்கொண்டிருப்பது போன்ற ஒரு கார்டூன் படத்தையும் அவர் அந்தப் பதிவில் இணைத்துள்ளார்.
விஜய் மற்றும் த்ரிஷா குறித்துத் தொடர்ந்து பரவி வரும் வதந்திகள் மற்றும் கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவோ அல்லது அவற்றைக் கிண்டலடிக்கும் விதமாகவோ த்ரிஷா இதைப் பதிவிட்டிருக்கலாமெனப் பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது கணவருக்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், அந்த உறவை அவர் கைவிடாததால் பிரிய முடிவெடுத்திருப்பதாகவும் சங்கீதா அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அந்த நடிகை த்ரிஷாவாக இருக்கலாமெனச் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதற்கு வலுசேர்க்கும் விதமாக, இருவரும் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு ஒரே காரில் சென்றது மற்றும் வாக்கு எண்ணிக்கையின்போது விஜய்யின் நீலாங்கரை இல்லத்திற்குத் த்ரிஷா வந்தது போன்ற நிகழ்வுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.
ஏற்கனவே தமிழக அரசியலில் தவெக-விற்கு மெஜாரிட்டி கிடைக்குமா? விஜய் முதல்வராகப் பதவியேற்பாரா? என்கிற குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்குத் த்ரிஷாவின் இந்தப் பதிவு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. “த்ரிஷா சொல்ல வருவது என்ன?” எனப் பலரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
விஜய்யின் அரசியல் வாழ்க்கை ஒருபுறம் சிக்கல்களைச் சந்தித்து வரும் வேளையில், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த இந்தப் பதிவுகள் தவெக தொண்டர்களிடையே ஒருவித சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.





