‘Fuel@Call’ சேவை – செங்கல்பட்டில் அறிமுகம்

0
7

செங்கல்பட்டு மாவட்டத்தில் வாகன ஓட்டிகளுக்கு உதவும் புதிய முயற்சியாக ‘Fuel@Call’ சேவை அறிமுகமாகியுள்ளது. வண்டியில் பெட்ரோல் அல்லது டீசல் இல்லாமல் சாலையில் சிக்கிக்கொள்ளும் நிலை பலருக்கும் ஏற்படும் நிலையில், அதைத் தவிர்க்கும் வகையில் இந்த சேவையை இந்தியன் ஆயில் நிறுவனம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சேவையின் மூலம், வாகன ஓட்டிகள் ஒரு அழைப்பின் மூலம் தங்களது இருப்பிடத்திற்கே எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும். இரவு அல்லது தொலைதூர பகுதிகளில் எரிபொருள் கிடைக்காமல் சிரமப்படும் பயணிகளுக்கு இது பெரும் உதவியாக இருக்கும். அவசர சூழ்நிலைகளில் உடனடி தீர்வாக இந்த சேவை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா ஈரான் இடையே போர் நடப்பதால் இந்தியா போன்ற நாடுகளில் டீசல் பெட்ரோல் மற்றும் எரிவாயு சேவை நிலையாக கிடைப்பதில்லை. இது மட்டுமின்றி பெட்ரோல் காலியாகி நடு ரோட்டில் வாகனம் நின்றுவிட்டால் நாம் உடனே கையில் கிடைக்கும் தண்ணி பாட்டிலை எடுத்துக்கொண்டு பெட்ரோல் பங்க் செல்வோம். ஆனால் அரசு உத்தரவுப்படி பெட்ரோலை பாட்டிலில் தரமாட்டோம் என்று ஊழியர்கள் மறுத்துவிடுகின்றனர். இந்த பிரச்சனைகளை தீர்க்கும் விதமாக இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

‘Fuel@Call’ சேவை பயன்படுத்துபவர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப பெட்ரோல் அல்லது டீசலை ஆர்டர் செய்யலாம். குறிப்பிட்ட நேரத்திற்குள், பாதுகாப்பாக எரிபொருள் வழங்கப்படும் என்றும், தரநிலைகள் முழுமையாக பின்பற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.

சாலையில் திடீர் சிக்கல்களை எதிர்கொள்ளும் வாகன ஓட்டிகளுக்கு இந்த சேவை ஒரு பயனுள்ள தீர்வாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக நீண்ட தூர பயணங்களில், எரிபொருள் குறைவால் ஏற்படும் தடைங்களை குறைக்க இது உதவும். இந்த புதிய சேவையை பயன்படுத்தி, தேவையான சமயங்களில் சுலபமாக எரிபொருளைப் பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த சேவையை எப்படி பயன்படுத்துவதென்றால் ப்ளே ஸ்டோரில் சென்று ‘Fuel@Call’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து ரிஜிஸ்டர் செய்து கொண்டு ஆர்டர் செய்யலாம். இந்த சேவை செங்கல்பட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.