“அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டேன்” என அதிமுக தலைவர்களிடம் செங்கோட்டையன் தெரிவித்ததாக வெளியான தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் விஜய்யின் வருகை பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், தவெகவில் இணைந்த மூத்த தலைவர் செங்கோட்டையன், தற்போது அதில் இருந்து வெளியேறும் மனநிலையில் உள்ளார் என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர், செங்கோட்டையன் தனது முடிவை வருத்தத்துடன் பகிர்ந்ததாகவும், “நான் அவசரப்பட்டு முடிவெடுத்தேன், நீங்கள் அந்த தவறை செய்ய வேண்டாம்” என்று அதிமுக முக்கிய நிர்வாகிகளிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
8 முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய அனுபவமிக்க செங்கோட்டையன், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்தார். ஆனால், அங்கு அவருக்கு உரிய மரியாதை இல்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
தற்போது, கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக சார்பில் செங்கோட்டையன் போட்டியிடும் நிலையில், அவர் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ள கருத்து, பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
TVK #Sengottaiyan #ADMK #Vijay #ElectionNews





