மெஜாரிட்டி? சிறிய கட்சிகள் ஆதரவு தேடும் நிலையில் TVK

0
2

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. மாலை 4:30 மணி நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகம் (TVK) 105 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இருப்பினும், தமிழகத்தில் ஆட்சியமைக்க தேவையான 118 இடங்களின் பெரும்பான்மை எண்ணிக்கையை இன்னும் எட்டவில்லை.

இந்த நிலையில், கட்சித் தலைவர் விஜய் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பான்மை கிடைக்காத சூழலில், மற்ற சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெறுவது முக்கிய விருப்பமாக பார்க்கப்படுகிறது.

தற்போதைய முன்னிலை கணக்கின்படி, காங்கிரஸ் சுமார் 5 தொகுதிகளிலும், பாமக 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. அதேபோல், விசிக 2, சிபிஐ 3 மற்றும் சிபிஎம் 1 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றன. இந்த கட்சிகளின் ஆதரவை TVK பெற்றால், ஆட்சியமைக்க தேவையான எண்ணிக்கை எளிதில் எட்டக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

இதனால், தேர்தல் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே கூட்டணி அரசியல் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது. விஜய் எந்தக் கட்சிகளுடன் கைகோர்ப்பார் என்பது அடுத்த கட்ட அரசியல் சூழ்நிலையை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.