Sunday, April 12, 2026
AdvertismentGoogle search engineGoogle search engine
Home Uncategorized குன்னத்துார் ஊராட்சியில் கிராம செயலகம் அமைப்பு – பொதுமக்கள் வரவேற்பு

குன்னத்துார் ஊராட்சியில் கிராம செயலகம் அமைப்பு – பொதுமக்கள் வரவேற்பு

0
2

கல்பாக்கம் அடுத்த குன்னத்துார் ஊராட்சி பகுதியில் இயங்கிய ஊராட்சி அலுவலக கட்டடம் சிதிலமடைந்தது. இதனால், பொதுமக்கள், ஊராட்சி நிர்வாகத்திடம் சேவைகள் பெற வரும் நிலையில், போதிய இட வசதியில்லை. நிர்வாக கோப்புகளை பாதுகாப்பாக வைக்க இயலவில்லை.

எனவே, வட்டார வளர்ச்சி நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவற்றுக்காக, 39.95 லட்சம் ரூபாய் மதிப்பில், கிராம செயலகமாக மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், கிராம செயலக கட்டடம், தற்போது கட்டப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here