Sunday, April 12, 2026
AdvertismentGoogle search engineGoogle search engine
Home செங்கல்பட்டு ஊராட்சி அலுவலகத்தில் பதிவறை எழுத்தர் வேலை – நீங்க தயாரா?

ஊராட்சி அலுவலகத்தில் பதிவறை எழுத்தர் வேலை – நீங்க தயாரா?

0
6
பதிவறை எழுத்தர் காலிப் பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் செங்கல்பட்டு மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள பதிவறை எழுத்தர் (Record Clerk) காலிப் பணியிடத்தை நிரப்புவதற்கான ஆள்சேர்க்கை அறிவிக்கை வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதிக்குள் (08.02.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்படவேண்டும்.

இனசுழற்சி, வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 08.02.2024 மாலை 5.45 மணிக்குள், ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், திருப்போரூர். என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் சமர்பிக்க வேண்டிய இறுதி நாளான 08.02.2024 மாலை 5.45 மணிக்கு பிறகு காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here