சென்னையில் வெள்ளப் பாதிப்பை தடுக்கும் வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏரிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையின் போது, வெள்ள பாதிப்பு ஏற்படுவது வழக்கம். குறிப்பாக, கடந்த 2015, 2021 மற்றும் 2023ம் ஆண்டுகளில், வெள்ள நீரால் அதிக அளவு சென்னை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரிகளை இணைத்தால், அந்த வெள்ள பாதிப்புகளை ஓரளவு தடுக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சுமார் ரூ.1,000 கோடி செலவில் இத்திட்டத்தை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.








