Sunday, April 12, 2026
AdvertismentGoogle search engineGoogle search engine
Home Crime வண்டலூர் திமுக பிரமுகர் கொலை – குற்றவாளிகளை விசாரிக்க அனுமதி

வண்டலூர் திமுக பிரமுகர் கொலை – குற்றவாளிகளை விசாரிக்க அனுமதி

0
2

வண்டலூர் திமுக பிரமுகர் கொலை வழக்கில் சரணடைந்த 9 பேரையும், ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க செங்கல்பட்டு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

தாம்பரத்தை அடுத்த வண்டலூரைச் சேர்ந்தவர் ஆராமுதன் (56). திமுக பிரமுகரான இவரை கடந்த மாதம் வண்டலூர் மேம்பாலம் அருகில் உள்ள படப்பை செல்லும் பிரதான சாலையில் மர்ம நபர்கள் கொலை செய்து விட்டு தப்பினர். இந்த சம்பவத்தில் இதுவரை சிறுவன் உட்பட 9 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

நீதிமன்ற காவலில் உள்ள 9 பேரில் சிறுவனை தவிர்த்து 8 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஓட்டேரி காவல் துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று (மார்ச் 11ஆம் தேதி) முதல் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, 8 பேரும் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர். விசாரணை முடிந்து மார்ச் 15ஆம் தேதி 8 பேரும்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here