செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் கேஸ் கசிந்து ஏற்பட்ட தீவிபத்தில், உறங்கிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பெரிய மணியக்காரர் பகுதியில், சுதாமி என்பவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரின் வீட்டில் நள்ளிரவில் கேஸ் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் சிக்கி உறங்கிக்கொண்டு இருந்தவர்களில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரு குழந்தை மற்றும் தாய் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.








