Sunday, April 12, 2026
AdvertismentGoogle search engineGoogle search engine
Home Local ஏர்கன் வெடித்து சிறுவன் படுகாயம் – செங்கல்பட்டில் அதிர்ச்சி

ஏர்கன் வெடித்து சிறுவன் படுகாயம் – செங்கல்பட்டில் அதிர்ச்சி

0
6

செங்கல்பட்டு ரைபிள் கிளப் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் ஏர்கன் வெடித்து சிறுவன் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முடிச்சூர் பகுதியில் செங்கல்பட்டு ரைபிள் கிளப் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான சிறுவர் மற்றும் சிறுமியர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை வழக்கம் போல் துப்பாக்கி சுடும் பயிற்சியில் சிறுவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வரும் சித்தார்த் என்ற 13 வயதுடைய மாணவன் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிறுவன் துப்பாக்கி சுடும் பயிற்சி செய்த திடீரென எதிர்பாராத விதமாக “ஏர் கன் வெடித்து அலுமினிய குண்டு தோள்பட்டையில் பாய்ந்துள்ளது. குண்டு உடலில் பாய்ந்ததும் சிறுவன் சித்தார்த் கதறித் துடித்துள்ளான். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை சதீஸ் பாபு உடனடியாக சிறுவனை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் தோள்பட்டையில் ஏர் கன் குண்டு வெடித்ததால் தோள்படையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை வேண்டும் எனக் கூறியுள்ளனர். அறுவைச் சிகிச்சை செய்வதற்கான நடவடிக்கையில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தகவலறிந்து வந்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து, தனியார் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here