தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி மற்றும் காவல் படைத் தலைவரை (DGP & HoPF) நியமிப்பதற்கான உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் இறுதிப் பகுதிக்கு வந்துள்ளன. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) விதிமுறைகளின்படி, மூன்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய இறுதிப் பட்டியலைத் தற்பொழுது மாநில அரசுக்கு உத்தியோகபூர்வமாகப் பரிந்துரை செய்துள்ளது.
யுபிஎஸ்சி இறுதி செய்துள்ள 3 அதிகாரிகள்:
ராஜிவ்குமார், ஐபிஎஸ் (காவல் உயர் பயிற்சியக டிஜிபி)
சந்தீப்ராய் ரத்தோர், ஐபிஎஸ் (தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தற்போதைய டிஜிபி)
மகேஷ்குமார் அகர்வால், ஐபிஎஸ் (மத்திய அரசுப் பணியில் உள்ள டிஜிபி)
உச்சநீதிமன்றத்தின் பிரகாஷ் சிங் வழிகாட்டுதலின்படி, இந்த 3 அதிகாரிகள் கொண்ட இறுதிப் பட்டியலிலிருந்து ஒருவரைத் தமிழ்நாட்டின் முழுநேர நிரந்தர டிஜிபியாக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக நல்லரசு இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்து அறிவிக்கும்.
சமூக நீதி மற்றும் 69% இட ஒதுக்கீட்டைக் காக்க அவசர ஆலோசனை நடத்திவிட்டு, டெல்லி உச்சநீதிமன்ற வழக்கிற்காக முதலமைச்சர் விஜய் இன்று தனி விமானம் மூலம் டெல்லி சென்றுள்ள பரபரப்பான வேளையில், கோட்டை காரிடாரில் இருந்து வந்துள்ள இந்த உத்தியோகபூர்வத் தகவல் அடுத்த ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றத்திற்கான மெகா விவாதத்தைக் கிளப்பியுள்ளது.





