செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) 2026-27 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு தொழில்பயிற்சி பிரிவுகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் கடந்த மே 16ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
Driver Cum Mechanic, Fitter, Mechanic Agriculture Machinery, Mechanic Auto Electrical and Electronics, Operator Advance Machine Tool, Sheet Metal Worker, Stenographer & Secretarial Assistant (English), Turner, Welder, Mechanic Diesel, Mechanic Motor Vehicle, Machinist, Wireman, Plumber, Carpenter, Refrigeration and Air Conditioning Technician, Computer Operator and Programming Assistant (COPA), Desktop Publishing Operator (DTP), Draughtsman Civil, Draughtsman Mechanical, Electronics Mechanic, Sewing Technology, Health Sanitary Inspector, Instrument Mechanic போன்ற படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் மாணவிகள் இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் தமிழ்நாடு திறன் பயிற்சி துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnskill.tn.gov.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் ஜூன் 3ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில் திறன்களை பெற விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு 94990 55673 மற்றும் 99629 86696 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





