தொடர் விடுமுறை, கோடை விடுமுறை மற்றும் சித்ரா பௌர்ணமி காரணமாக தென் மாவட்டங்களுக்கு மக்கள் பெருமளவில் புறப்பட்டதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் சிக்கின.
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையான ஜி.எஸ்.டி சாலையில், செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர் விடுமுறையுடன், பள்ளி தேர்வுகள் முடிந்ததால் குடும்பங்களாக மக்கள் வெளியூர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு பக்தர்கள் பெருமளவில் புறப்பட்டுள்ளனர்.
இருசக்கர வாகனங்கள் முதல் கார்கள், வேன்கள், பேருந்துகள் வரை அதிக எண்ணிக்கையில் சாலையில் திரண்டதால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கினர்.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து, வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
#Chengalpattu #TrafficJam #GSTroad #HolidayRush #BreakingNewsTamil





