₹12,000-க்குள் 5ஜி ஸ்மார்ட்போன் தேடும் பயனர்களை குறிவைத்து, பெரிய பேட்டரி மற்றும் 120Hz டிஸ்பிளேவுடன் புதிய மாடலை ரெட்மி அறிமுகப்படுத்தியுள்ளது.
ரெட்மி நிறுவனம் தனது புதிய Redmi A7 Pro 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 6.9 இன்ச் HD+ LCD டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 800 நிட்ஸ் பிரைட்னஸ் ஆகிய அம்சங்களுடன் இந்த போன் வருகிறது. Unisoc T8300 சிப்செட், 4GB ரேம் மற்றும் 128GB வரை ஸ்டோரேஜ் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
32MP டூயல் ரியர் கேமரா, 8MP செல்பி கேமரா ஆகியவை புகைப்பட தேவைகளை பூர்த்தி செய்கின்றன. Android 16 அடிப்படையிலான HyperOS 3, 4 வருட அப்டேட்கள், 6 வருட பாதுகாப்பு அப்டேட்கள் ஆகியனவும் இதில் உள்ளது. 6300mAh பேட்டரியுடன் 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 7W ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
₹11,499 ஆரம்ப விலையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன், ஏப்ரல் 15 முதல் Flipkart மற்றும் Xiaomi தளங்களில் விற்பனைக்கு வரும். Black, Mist Blue, Sunset Orange நிறங்களில் வெளியாகிறது.
Gadgets #Redmi #5GSmartphone #TechNewsTamil #Trending





